பழைய ரூபாய் நோட்டுகள் 500, 1,000 வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டமசோதாவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த மாதம் 8-ம் தேதி தடை செய்தது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி மாற்றிகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது 


இந்நிலையில் மக்கள் தங்களிடமுள்ள கருப்பு பணம் குறித்த விவரங்களை தெரிவிக்க அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதி வரை கதானாக முன் வந்து தெரிவிக்கலாம். 50 சதவீதம் வரி மட்டுமே விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு. கருப்பு பணத்தை தானாக முன் வந்து தெரிவிக்க காலக்கெடுவை 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.


தற்போது ஒருவேளை செல்லாது என அறிவித்த பழைய ரூபாய் நோட்டுகள் 500, 1,000 வைத்திருந்தால், அதனை வைத்திருப்போர் அதன் தொகைக்கு ஏற்ப ஐந்து மடங்கு அபராதமாகச் செலுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்பதுல் அளித்துள்ளார்.