புதுடெல்லியில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள RSS கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு RSS அழைப்புவிடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்தமாதம் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் நாள் வரை புதுடெல்லியில் ‘Future of Bharat: An RSS’ perspective’ என்னும் தலைப்பில் RSS சார்பில் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் CPI(M) மூத்த தலைவர் சித்தாராம் யச்சூரி ஆகியோருக்கு அழைப்புவிடுக்க RSS திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து RSS தலைவர் மோகன் பகவத் தெரிவிக்கையில்... இந்த 3 நாள் கூட்டத்தின் நோக்கம் வெவ்வேறு சிந்தனைகள் கொண்டவர்களை ஒன்றாக அழைத்து பேச வைப்பது தான் என குறிப்பிட்டுள்ளார்.


முன்னாதக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த RSS கூட்டத்தில் பேசுவதற்கு குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு RSS அமைப்பு அழைப்பு விடுத்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி சிறப்புரையாற்றினார். அப்போது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது புதுடெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு RSS அழைப்பு விடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுதொடர்பாக RSS மூத்த நிர்வாகி அருண் குமார் தெரிவிக்கையில் ‘‘டெல்லி விக்யான் பவனில் RSS சார்பில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். எதிர்கால பாரதம் என்ற தலைப்பில் RSS தலைவர் மோகன் பகவத் உரையாற்றுகின்றார். 


இக்கூட்டத்திற்கு பல்வேறு மாற்றுக் சிந்தனை கொண்ட தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களையும், மற்ற மத தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளோம்’’ என தெரிவித்துள்ளார்.