மும்பை: ஆர்.எஸ்.எஸ். அவதூறு வழக்கில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிராவில் பிவாண்டி நீதிமன்றம் தனிநபர் பிணையின் அடிப்படையில் ராகுலலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.


2014-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி அன்று பிவாண்டியில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான் என்று பேசியுள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குன்ட்டே என்பவர் பிவாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இவ்வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பிவாண்டி நீதிமன்றம் தொடர்ந்து சம்மன் அனுப்பியது. அவற்றை ரத்துசெய்ய ராகுல் காந்தி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.


இதனிடையே, மும்பை ஐகோர்ட்டில் இவ்வழக்கிற்காக ஆஜரான ராகுல் காந்தி, மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் என்று தான் கூறவில்லை என்றும் காந்தியைக் கொன்றவருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர் இருந்தது என்றுதான் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனை இறுதி வாக்குமூலமாகக் கொண்டு ராகுல் மீதான பிவாண்டி நீதிமன்றத்தின் சம்மன்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர், சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கையும் ராகுல் வாபஸ் பெற்றார்.


இந்நிலையில், பிவாண்டி நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் ராகுல் காந்தி நவம்பர் 11-ம் தேதி 2016 ஆண்டு நேரில் ஆஜரானார். அப்போது, ராகுலின் சொந்த ஜாமினில் அவரை விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. 


இந்நிலையில் இன்று இந்த வழக்கின் மீதான தொடர் விசாரணை பிவாண்டி நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.