இந்திய ராணுவத்துக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணையை இந்தியாவுக்காக வழங்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது. மேலும் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இதுகுறித்த பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இரு நாட்டின் நலனையும் கருத்தில்கொண்டு, 12 ஒப்பந்தங்களில் இந்தியா- ரஷ்யா இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் இந்தியாவுக்காக மிகவும் அதி நவீன எஸ்-400 ரக ஏவுகணையை வழங்கத் தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது. 


இதுதொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, எஸ்-400 ரக ஏவுகணையின் தயாரிப்புப் பணிகள் நடைபெறத் தொடங்கிவிட்டன என்றும் இந்தியாவுக்கு அளிக்கும் நாள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோகோசின் அறிவித்துள்ளார்.


இந்த எஸ்-400 ரக ஏவுகணை 400 கி.மீ தொலைவிலிருந்து தாக்க வரும் ஏவுகணை மற்றும் விமானங்களைக் கண்டறிந்து, தாக்கும் திறனுடையது.