ஹரியானா மாநிலம் குர்கான் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2ம் வகுப்பில் படிக்கும் 7 வயது மாணவன், பள்ளியின் கழிவறை இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலியல் கொடுமையால் அந்த சிறுவனை பள்ளியின் கண்டக்டர் அசோக் கொன்றது தெரியவந்தது. அவனை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகிறது. 


இதற்கிடையே இந்த விபத்துக்கு பெரிய சதிதிட்டம் உள்ளது என்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. 


இந்த சம்பவத்தால் நேற்று பள்ளி அமைந்திருக்கும் பகுதியில் போராட்டம் நடைபெற்றது, போராட்டம் கடைசியில் வன்முறையில் முடிந்தது. பெற்றோர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிபிஐ விசாரணை நடத்தும் வரை அந்த பள்ளியை மூட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  


இதற்கிடையே அந்த பள்ளியின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய ஹரியானா கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளியின் மூத்த அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 


இதற்கிடையே சிறுவனின் தந்தை இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு சம்மதம் தெரிவித்து உள்ளது. பள்ளி நிர்வாகம் செவ்வாய் கிழமை வரையில் அனைத்து வளாகத்தையும் மூட உத்தரவிட்டு உள்ளது.


விசாரணைக்கு போலீசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம் என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில் நேற்று இரவும் பள்ளியில் பணியாளர்களை போலீஸ் கைது செய்து உள்ளது.


குர்கானில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் சிறுவன் கொல்லப்பட்டதை அடுத்து நொய்டாவில் உள்ள அதே பள்ளியின் கிளையின் முன்பாகவும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 


ரியான் சர்வதேச பள்ளியின் தலைமையகம் மும்பையில் உள்ளது. அங்கு சென்று பள்ளியின் தலைவரிடம் விசாரிக்க ஹரியானா போலீஸ் மும்பை விரைந்து உள்ளது. 


முறையான ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்பின்றி பள்ளி ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டது தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றைய போராட்டத்தின்போது பள்ளி அருகில் இருந்த மதுக்கடைக்கு தீவைத்ததாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.


மேலும் ரியான் குரூப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மும்பை ஐகோர்ட்டில் தனது வழக்கை விசாரிப்பதற்கு முன்னதாகவே முன் ஜாமீன் கோரியுள்ளார். இதைதொடர்ந்து மும்பை ஐகோர்ட் இந்த வழக்கை நாளை விசாரிக்க உள்ளது.