ஹரியானாவின் குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பள்ளி இன்று முதல் திறக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானாவின் குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 2-ம் வகுப்பு மாணவன் சமீபத்தில் பள்ளி பேருந்து நடத்துனர் ஒருவரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டான். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயன்ற போது இந்த கொலை நடந்தது.


இந்த சம்பவங்கள் மாணவர்களின் பெற்றோரிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்து இருப்பதுடன், புதிய வழிகாட்டு நெறிகளையும் வெளியிட்டு உள்ளது.


இதற்கிடையே இந்த விபத்துக்கு பெரிய சதிதிட்டம் உள்ளது என்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இந்த சம்பவத்தால் பள்ளி அமைந்திருக்கும் பகுதியில் போராட்டம் நடைபெற்றது, போராட்டம் கடைசியில் வன்முறையில் முடிந்தது.


இதற்கிடையே அந்த பள்ளியின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய ஹரியானா கல்வி அமைச்சர் உத்தரவிட்டு இருந்தனர். மேலும் பள்ளியின் மூத்த அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இதற்கிடையே சிறுவனின் தந்தை இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு சம்மதம் தெரிவித்து இருந்தது.


இந்நிலையில் கடந்த 8-ம் தேதிக்குப் பிறகு ரியான் இண்டர்நேஷனல் பள்ளி இன்று திறக்கப்பட்டது.