ராஜஸ்தான், கேரளம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநில உயர் நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ரவிசங்கர் ஜா, பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி அஜய் லாம்பா, குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரஜித் மஹந்தி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ. மணி குமார், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டனர். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எல். நாராயண சுவாமி, ஹிமாசல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, குவாஹாட்டி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. கோஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார்.


கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி விஸ்வநாத் சமாதார், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் அகர்வால் ஆகியோர் அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. சஞ்சய்குமார், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.