புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை திட்டத்திற்கு பஞ்சாப் அரசு ஒப்புதல்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநிலத்தில் புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்ட திருத்தத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, புனித நூல்களான பகவத்கீதை, குரான், பைபிள், குரு கிரந்த் சாகிப் ஆகியவற்றை மத உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கத்துடன் கிழித்தாலோ, சேதப்படுத்தினோலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.


இதற்காக இந்திய தண்டனை சட்டத்தில் புதிதாக 295 ஏஏ பிரிவு சேர்க்கப்படுகிறது. முதல் மந்திரி அம்ரீந்தர் சிங் தலைமையில் நடந்த மாநில மந்திரி சபை கூட்டத்தில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


பஞ்சாப் மாநிலத்தில் புனித நூல்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்கவும், சமூக நல்லிணக்கத்தை தொடர்ந்து பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்..!