எங்களுக்கு பிரதமர் மந்திரி தான் வேணும் பிரச்சார மந்திரி இல்லை: அகிலேஷ் யாதவ்
நாட்டுக்கு ஒரு நல்ல பிரதமர் மந்திரி தான் வேணுமே தவிர... ஒரு பிரச்சார மந்திரி(மோடி) தேவை இல்லை என மோடி குறித்து அகிலேஷ் யாதவ் கருத்து.
ஹார்டோய்: இன்று தேர்தல் பரப்புரையில் கலந்துக்கொண்டு பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து பேசினார். பிரிவினை ஏற்படுத்தி மக்களின் அதிகாரத்தைப் பறித்த பிரிட்டிஷ் பிரிவின் ஆட்சி கொள்கையை பி.ஜே.பி பயன்படுத்தி வருகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.
அவர் பேசியது, "SP+ BSP+RLD கூட்டணி என்பது மற்ற கூட்டணி போல சாதாரண கூட்டணி என நினைக்க வேண்டாம். இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. எங்கள் கூட்டணி நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும்.
இந்த கூட்டணி ஏழைகளுக்கான கூட்டணி. கிராமத்தில் வசிப்பவர்களுக்கான கூட்டணி. பல ஆண்டுகளாக கௌரவம் கிடைக்காத மக்களுக்கான கூட்டணி. வயலில் இறங்கி வியர்வை சிந்தி வேலை பார்க்கும் மக்களுக்கான கூட்டணி ஆகும்.
பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) கூறுகிறது, எங்களால் நாட்டுக்கு ஒரு வலுவான பிரதமரை தர முடியாது என்று, ஆனால் நாங்கள் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்... எப்பொழுதெல்லாம் நாட்டுக்கு ஒரு வலுவான பிரதமர் தேவைப்பட்டதோ, அப்பொழுதெல்லாம் ஒரு வலுவான மற்றும் புகழ்பெற்ற பிரதம மந்திரியை நாட்டுக்கு வழங்கியிருகிறது கூட்டணி கட்சிகள் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.
நாட்டுக்கு ஒரு நல்ல பிரதமர் மந்திரி தான் வேணுமே தவிர... ஒரு பிரச்சார மந்திரி(மோடி) தேவை இல்லை என அகிலேஷ் யாதவ் கூறினார்.