இந்திய ராணுவ வீரர்களை அலட்சியம் செய்வதாக ஆளும் ஆட்சி மீது குற்றம்சாட்டிய தேஜ் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் சார்பில், வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக களம் இறக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினருக்கு, தரமற்ற உணவு வழங்கப்படுவதாக, வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, பி.எஸ்எப்., முன்னாள் வீரர் தேஜ் பகதுார் யாதவ், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகயுள்ளது. இவர் இத்தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளார்.


பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணயாற்றியவர் தேஜ் பகதுார் யாதவ். 2017-ஆம் ஆண்டு, அவர் பணியில் இருந்த போது, சீருடையுடன் ஓர் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். 


இந்த வீடியோவில் ராணுவம், துணை ராணுவப் படையினருக்கு மிக மோசமான தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். 


இந்த வீடியோ பதிவு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, யாதவிடம் நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையின் போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது, இதனையடுத்து தேஜ் பகதூர் யாதவ் பணியிலிருந்து நீக்கப்பட்டார். 


இந்நிலையில், மக்களவை தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடியை  எதிர்த்து, தான் போட்டியிட உள்ளதாக யாதவ் அறிவித்திருந்தார். 


இதை தொடர்ந்து, தேஜ் பகதுார் யாதவை, தங்கள் கட்சியின் சார்பில், வாரணாசியில் களம் இறக்குவதாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. 


சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியின் சார்பில் ஏற்கனவே களம் இறக்கப்பட்ட வேட்பாளர், தன் வேட்பு மனுவை திரும்பப் பெறுவார் என்றும், அந்தக் கட்சி தலைமை அறிவித்துள்ளது.