இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை வரும் மார்ச் 3ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976–ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும், இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கும் இடையே ஆரம்பத்தில் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் காலிஸ்தான் அமைப்பினரின் அச்சுறுத்தலால் அது லாகூரில் இருந்து, பஞ்சாப்பின் அட்டாரியுடன் நிறுத்தப்பட்டது. மேலும், 1994ம் ஆண்டு முதல், வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது.


எல்லையில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி இந்த ரெயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை வரும் மார்ச் 3ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.