புது டெல்லி: பலர் இன்னும் "லாக் டவுன்" உத்தரவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தயவு செய்து அதை பின்பற்றுமாறு மாநில அரசுக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோய் அச்சத்தை அடுத்து, அதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது இந்தியா முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை 75 மாவட்டங்களை லாக்-டவுன் (Lock Down) செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவை இன்னும் சில மாநிலங்கள் கடைபிடிக்காததால், அதுக்குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.


அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பலர் இன்னும் லாக்-டவுன் உத்தரவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தயவுசெய்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள். அதன் வழிமுறைகளை தீவிரமாக பின்பற்றவும். விதிகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்றுமாறு மாநில அரசுகளை நான் கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.


 



அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 651 புதிய மரணங்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 5,476 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா 8 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை நாடு முழுவதும் 396 ஐ நெருங்கி உள்ளது. மேலும் புது தில்லி மற்றும் மும்பை மற்றும் பல மாநில தலைநகரங்கள் லாக்-அவுன் உத்தரவு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. உலகெங்கிலும் 330,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 99,003 பேர் மீண்டுள்ளனர்.