நாட்டின் பிரதான வங்கிகளில் ஒன்றான SBI, தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத்தொகை வைத்திருப்பதிற்கான புதுநிபந்தணைகளை கொண்டுவந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் பிரதான வங்கியான SBI-யுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சுமார் 37 கோடியாக உயர்ந்துள்ளது. 


எனவே தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத்தொகை வைத்திருப்பதிற்கான தொகையினை குறைத்து SBI வங்கி அறிவித்துள்ளது.


இதன்படி நகரங்கள், நடுத்தர நகரங்கள், புறநகரங்கள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு மூன்று விதமான குறைந்த பட்ச இருப்புத்தொகையை SBI நிர்ணையித்து உள்ளது. 


நகரங்களில் கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த பட்ச இருப்புத்தொகையானது 5 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேலையில் குறைந்த பட்ச இருப்புத்தொகை பராமரிக்காத வங்கிகணக்குகளுக்கு   விதிக்கப்பட்ட அபராத தொகையை 75% ஆக குறைத்துள்ளது.


அதேப்போல் நடுத்தர நகரங்களில் கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 அபராதம் மற்றும் அத்துடன் GST வரி ரூ.15 என ஆக மொத்தம் 65 ரூபாய் என வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதுவிதிகளுடனான நடைமுறையானது வரும் ஏப்ரல் 1 ஆம் நாள் முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள!