ஜூலை 31 வரை சமரசக் குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம்: SC
அயோத்தி நில வழக்கில் 3 பேர் கொண்ட சமரசக் குழுவின் இடைக்கால அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் !!
அயோத்தி நில வழக்கில் 3 பேர் கொண்ட சமரசக் குழுவின் இடைக்கால அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் !!
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், அயோத்தி வழக்கு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சமரசக்குழு சரியாக செயல்படவில்லை எனவும் இந்து அமைப்புகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 18ஆம் தேதிக்குள் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யும் படி சமரசக்குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரவின் படி, 3 பேர் கொண்ட சமரசக்குழு அயோத்தி வழக்கு தொடர்பான இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. அறிக்கையை பெற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இடைக்கால அறிக்கை ரகசியமாக வைக்கப்படும் என்றும், சமரசக்குழு ஜூலை 31 வரை தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் எனவும் அறிவித்தது. மேலும், இடைப்பட்ட காலத்தில் எடுக்கக் கூடிய நடவடிக்கையை ஜூலை 31ல் சமரசக்குழு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.