NOTA-விற்கு அதிக வாக்குகள் கிடைத்தால்... மத்திய அரசிடம் பதிலை கோரியது SC..!!!
நோட்டாவுக்கு அதிக பட்சமான வாக்குகள் கிடைத்தால் தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
நோட்டாவுக்கு அதிக பட்சமான வாக்குகள் கிடைத்தால் தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நடக்கும் தேர்தலில் பதிவாகும் வாக்குகளில், நோட்டாவுக்கு (NOTA) பதிவாகும் வாக்குகள் அதிகமாக இருந்தால், அந்தத் தொகுதியில் தேர்தல் முடிவை ரத்து செய்து, மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் (BJP) மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
மேலும் இந்த மனுவில் நோட்டாவுக்குக் (NOTA -None of the Above) குறைவான வாக்குகள் பெற்ற வேட்பாளர்களுக்கு, புதிதாக நடக்கும் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே (CJI SA Bobde), நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, ராமசுப்பிரமணியன், ஆகியோர் அடங்கிய நீதிமன்ற பிரிவின் முன் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி தலைமையிலான பிரிவு, விசாரணையின் போது, "நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும் தொகுதியில் தேர்தல் முடிவுகள் ரத்து செய்யப்பட்டால், நாடாளுமன்றத்துக்கோ அல்லது சட்டப்பேரவைக்கோ உறுப்பினர்கள் செல்ல முடியாமல் போகும். அப்போது நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டப்பேரவையிலோ அவர்கள் தொகுதிக்கான இடம் காலியாக இருக்குமே" எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த மனுதாரரின் வழக்கறிஞர், "தற்போதுள்ள நிலையில் 99 சதவீத வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் முன்நிறுத்தும் வேட்பாளர்களை பிடிப்பதில்லை. ஒரு சதவீத வாக்குகள் மட்டுமே முடிவுகளை தீர்மானிக்கின்றன" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த மனு தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சகம், தேர்தல் ஆணையம் ஆகியவை உரிய பதில் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி நோட்டீஸ் அனுப்பத் தலைமை நீதிபதி அடங்கிய உத்தரவிட்டது.
ALSO READ | Batla House encounter: ஆரிஸ் கானிற்கு மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR