சபரிமலை விவகாரத்தில் தொடர்புடைய மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று (6 ஜனவரி ஆம் தேதியில்) விசாரணை மேற்கொள்ள உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களிலும், மதங்களிலும் பெண்கள் பாகுபடுத்தப்படுவதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பொது விவகாரங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரித்தது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுடன், நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், எம்.எம். சாந்தன கௌடர், எஸ்.ஏ. நஸீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, அவர் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் இடம்பெற்றனர்.


இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தால் ஆராயப்பட வேண்டிய பொதுவான விவகாரங்கள் குறித்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கழிஞர் அபிஷேக் சிங்வி உள்பட 4 மூத்த வழக்குரைஞர்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.


கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது.


இத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 56 மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி உத்தரவிட்டது.


இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் தொடர்புடைய மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று (6 ஜனவரி ஆம் தேதியில்) ஒத்திவைத்தது. அந்தவகையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடக்க உள்ளது.