ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும்: SC
ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
11:00 AM | 4/10/2019
ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியது குறித்து விசாரணையில் விளக்குவோம்: அருண் ஷோரி
தவிர, மனுதாரர் சார்பில், முன்வைக்கப்படும் ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கவும் நீதிபதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். விரைவில் விசாரணை தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
10:43 AM | 4/10/2019
ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு. பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரும் சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது!!
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரஃபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆயினும் முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அளித்த விவரங்கள் திரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் கூறப்பட்டதாகவும், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் பிரசாந்த் பூஷண் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில், சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.