ஓரினச்சேர்க்கை திருமண சட்ட அங்கீகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Special Marriage Act: சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது
நியூடெல்லி: சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ், ஒரே பாலின திருமணங்கள், லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், டிரான்ஸ், இன்டர்செக்ஸ் மற்றும் க்யூயர் அல்லது LGBTIQ+ சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இடையேயான உறவுகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்கான மனு தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று (நவம்பர் 25) உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து, தங்கள் திருமணத்தை நடத்த அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஒரு ஓரினச்சேர்க்கை தம்பதியினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், இந்த மனு தொடர்பாக மத்திய அரசுக்கும், இந்திய அட்டர்னி ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. நான்கு வாரங்களுக்கு பிறகு இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கும்.
1954 ஆம் ஆண்டின் சிறப்பு திருமணச் சட்டம், தனிப்பட்ட சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள முடியாத தம்பதிகளுக்கு திருமணத்தின் சிவில் வடிவத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஒரு பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கியது இந்த கம்யூனிஸ்ட் நாடு
சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து, தங்கள் திருமணத்தை நடத்த அனுமதிக்குமாறு நீண்டகாலமாக கோரிக்கைகள் எழுந்துவந்த நிலையில், அண்மையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஓரினச்சேர்க்கை ஜோடி ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
LGBTQ+ சமூகத்தின் உறுப்பினர்கள், தங்களுக்கு விருப்பமான எந்த நபரையும் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கும் சட்டக் கட்டமைப்பு இல்லாதது தொடர்பான விஷயத்தை இந்த மனு சுட்டிக்காட்டியது.
மனுவின்படி, தம்பதியினர் LGBTQ+ தனிநபர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த நபரையும் திருமணம் செய்து கொள்வதற்கான அடிப்படை உரிமைகளை அமல்படுத்த முற்பட்டனர், மேலும் "சட்டபூர்மவாகவும், பொதுமக்களின் அவமதிப்பில் இருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று இந்த மனுவில் ஓரிச்சேர்க்கை ஜோடி கேட்டுக் கொண்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ