ராஜஸ்தானில் பேனாவுக்கு சண்டை போட்டு விவகாரத்தில் பள்ளி மாணவியை சக மாணவி கொலை செய்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் சாக்சு என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 13 வயது சிறுமி 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் கொலை நடந்த சம்பவத்தன்று தேர்வு எழுத பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த வகுப்பறைக்கு வந்த சக மாணவி ஒருவர் அங்கிருந்த பேனாவை எடுத்துள்ளார்.


இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஒருவர் மீது ஒருவர் பொருட்களை தூக்கி வீசியுமுள்ளனர். பின்னர் தேர்வு முடிந்ததும் சக மாணவியின் வீட்டிற்கு பாதிக்கப்பட்ட மாணவி சென்றுள்ளார்.  அங்கு சென்றதும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.


இதனால் ஆத்திரமடைந்த சக மாணவி திடீரென இரும்பு தடியால் அந்த மாணவியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்து அந்த மாணவி போலீசிடம் புகார் அளிக்க போவதாக மிரட்டியுள்ளார்.


இதனால் அச்சமடைந்த சக மாணவி வீட்டில் இருந்த ஆயுதம் ஒன்றை எடுத்து 19 முறை அடித்து, தாக்கியதில், அந்த மாணவி உயிரிழந்து உள்ளார்.  பின்னர் பிளாஸ்டிக் பையால் அவரது உடலை மூடி வீட்டில் வைத்து உள்ளார்.  


மாலை வீடு திரும்பிய தாயாரிடம் இதனை தெரிவித்து உள்ளார். அவர் மகளை காப்பதற்காக உடலை அருகே இருந்த ஒரு குளத்தில் வீசியுள்ளார். பின் தனது கணவரிடம் தெரிவித்த அவர் குளத்தில் இருந்து உடலை எடுத்து, வீட்டில் இருந்து தொலைவான இடத்தில் வீசி விட்டு வந்துள்ளனர்.


இதனை அடுத்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடிய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செயலில் ஈடுபட்ட மாணவியை கைது செய்தனர்.