விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு :பசு மாட்டின் சிறுநீரில் தங்கம்
![விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு :பசு மாட்டின் சிறுநீரில் தங்கம் விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு :பசு மாட்டின் சிறுநீரில் தங்கம்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2016/06/29/107507-holly-cow.jpg?itok=CljI9O9-)
ஜூனாகத் விவசாய பல்கலைக்கழக அறிவியலாளர்கள் 400 கிர் பசுமாடுகளின் சிறுநீரை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு லிட்டர் சிறுநீரில், 3 மில்லி கிராம் முதல் 10 மில்லி கிராம் வரை தங்கம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இந்த விஷயத்தை நீங்கள் முதன்முறையாகத்தான் கேள்வி பட்டிருப்பீர்கள். குஜராத்தின் கிர் பகுதியில், பசுமாட்டின் சிறுநீரை பரிசோதித்த விஞ்ஞானிகள், அதில் தங்கம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
தங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி, அதை வாங்குபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் எப்போதுமே குறைவதில்லை. மிக அதிகப்படியான தங்கத்தை சேமித்து வைத்துள்ள நம் நாட்டு மக்களுக்கு, தங்கத்தின் மீதான ஆர்வம் துளியும் குறைந்ததில்லை. மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, நாட்டின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கும் வகையில் இந்த புதிய கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.