புது டெல்லி: மனைவி மெலனியா, மகள் இவான்கா மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்க அமைச்சரவையின் பல மூத்த உறுப்பினர்களுடன் இரண்டு நாள் பயணமாக வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகைக்காக இந்தியா காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “உங்கள் வருகையை இந்தியா காத்திருக்கிறது @POTUS @realDonaldTrump! உங்கள் வருகை நிச்சயமாக எங்கள் நாடுகளுக்கு இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்தும். அகமதாபாத்தில் மிக விரைவில் சந்திப்போம்” என்று அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்குச் செல்லும்போது வெளியிட்ட ட்வீட்டுக்கு பதிலளித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


 



பிரதமர் மோடி (PM Narendra Modi) தனது பயணத்தின் முதல் கட்டமான அகமதாபாத்தில் (Ahmedabad) டிரம்பைப் வரவேற்பார். அமெரிக்க ஜனாதிபதியுடன் சேர்ந்து, 1.10 லட்சம் பேர் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோட்டேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் ‘நமஸ்தே டிரம்ப்’ (Namaste Trump) நிகழ்ச்சியில் உரையாற்றுவார்.


அமெரிக்க அதிபரின் உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்னதாக பிரதமர் மோடிக்கும் அதிபர் டிரம்பிற்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்த இந்தியா தயாரா உள்ளது. ரோட்ஷோவின் போது இரு தலைவர்களையும் வாழ்த்துவதற்காக அகமதாபாத் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக நின்று வரவேற்க பெரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


"இரண்டு பெரும் ஆளுமைகள், ஒரு முக்கியமான சந்திப்பு, இரண்டு வலுவான நாடுகள் மற்றும் சிறந்த நட்பு" என்ற சொற்களைக் கொண்ட பெரிய விளம்பர பலகைகள் நகரம் முழுவதும் காட்சியளிக்கின்றன.


வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இரண்டு நாள் பயணம்" நீண்ட காலமாக இல்லை என்று தான் உணர்ந்தேன், இருப்பினும் இது மிகவும் உற்சாகமாக இருக்கும். நான் ஒரே ஒரு இரவு தான் அங்கே இருக்கப் போகிறேன். அது அதிகம் இல்லை தான். ஆனால் இது மிகவும் உற்சாகமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.


அகமதாபாத்துக்குப் பிறகு, டிரம்பும், அமெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவி மெலனியாவும் தாஜ்மஹாலைப் பார்க்க ஆக்ராவுக்குச் செல்வார்கள். ட்ரம்ப் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார். அமெரிக்க உற்பத்தித் துறையினர் இந்திய முதலீட்டாளர்களைச் சந்திப்பார்கள். ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விருந்தில் கலந்துகொள்வார்.


நவம்பரில் அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், அமெரிக்க ஜனாதிபதி ஒரு இறுக்கமான கால அட்டவணையைக் கொண்டுள்ளார். இதனால் நாடு திரும்பும் டிரம்ப் வியாழக்கிழமை தென் கரோலினாவில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.