ஒரே நாளில் 1,100 புள்ளிகள் சரிந்த பங்குச்சந்தை; படிப்படியாக மீட்சி...
ஒரே நாளில் 1,100 புள்ளிகள் சரிந்த இந்திய பங்குச்சந்தை, படிப்படியாக மீண்டு எழுச்சி பெற்றது.
ஒரே நாளில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்கு வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால் யெஸ் பேங்க், மாருதி சுஸுகி, இன்ஃபோசிஸ், சன் பார்மா, டாடா மோட்டார் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலைகளில் மிகப்பெரிய தாக்கம் ஏற்ப்பட்டத்து.
இன்று மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 1,100 புள்ளிகள் குறைந்து 35,993.64 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் குறைந்து 11,000 புள்ளிகளாக இருந்தது. தற்போது பங்குச் சந்தை சற்று ஏற்முகத்துடன் காணப்படுகிறது.
தற்போது படிப்படியாக உயர்ந்து பிற்பகல் 3மணிக்கு மேல் சென்செக்ஸ் 36,897.38 புள்ளிகளாவும், நிஃப்டி 11,168.00 புள்ளிகளாகவும் உயர்ந்ததுள்ளது.