தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) சமர்ப்பித்த அறிக்கையில் மாநில காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹெரா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலத்தில் வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பிற்காகவும், இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பவர்களுக்காகவும் இரண்டு புல்லட் புரூப் கார்கள் வாங்குவதற்காக 2016-2017 ஆம் காலகட்டத்தில் அரசு 1.26 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. இதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டில் கேரளா அரசு அனுமதியும் வழங்கப்பட்டது. 


ஸ்டோர் பர்ச்சேஸ் மேனுவலுக்கு இணங்க திறந்த டெண்டர் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின் பேரில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஓப்பன் டெண்டர் முறையை டி.ஜி.பி லோக்நாத் பெகரா கடைப்பிடிக்கவில்லை என்று சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


புல்லட் புரூப் கார்கள் வாங்குவதற்காக டி.ஜி.பி லோக்நாத் பெகரா ஒரு வல்லுநர் குழுவை உருவாக்கியுள்ளார். அந்தக் குழுவின் தீர்மானத்தின்படி ரூ.55.02 லட்சம் மதிப்புள்ள இரண்டு புல்லட் புரூப் கார்களுக்கான வாகன கம்பெனியில் சப்ளை ஆர்டர் வழங்கியுள்ளார். சப்ளை ஆர்டர் வாங்கப்பட்ட அன்றே வாகனம் வாங்குவதற்கான அனுமதி வேண்டி அரசுக்குக் கடிதமும் அளித்துள்ளார். 


நிற்காமல் புல்லட் புரூப் கார் சப்ளை செய்வதற்காக 33 லட்சம் ரூபாய் முன் பணமும் வழங்கியுள்ளார். புல்லட் புரூப் கார் வாங்குவதற்கு ஓப்பன் டெண்டர் விடவில்லை என்பதும், அரசு அனுமதி இல்லாமல் 33 லட்சம் ரூபாய் வழங்கியது தவறு என்பதால் டி.ஜி.பி லோக்நாத் பெகரா மீது சிஏஜி குற்றச்சாட்டியுள்ளது.


இந்நிலையில் தற்போது சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளுடன் தொடரலாம். எனவே பெஹெரா மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.