ஏழு தலைகள் கொண்ட பாம்பு என்று கிராமவாசிகள் நம்பும் ஒரு தோலைக் கர்நாடகாவின் மரிகவுடனா டோடியில் அப்பகுதி மக்கள் கண்டறிந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகே புதன்கிழமை பாம்பின் தோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து "ஏழு தலை" பாம்பு பற்றிய செய்தி காட்டுத்தீ போல் பரவியது. தொடர்ந்து பிற கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் "புராண" பாம்பின் பார்வையைப் பெற இப்பகுதிக்கு திரண்டுள்ளனர்.


கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற தோல் காணப்பட்டதாக ஒரு உள்ளூர்வாசி தெரிவித்துள்ளார், மேலும் இந்த பாம்பின் தோல் கண்டெடுக்கப்பட்ட கோவிலுக்கு சில சிறப்பு அதிகாரங்கள் இருப்பதாக நம்புகிறார்கள். 


இதுகுறித்து உள்ளூர்வாசி ஒருவர் தெரிவிக்கையில்., "இப்போது, கோயிலுக்கு அருகே பாம்பின் தோல் கண்டறியப்பட்டுள்ளது. காலையில் வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு கோயில் ஊழியர், பாலப்பா என்ற கிராமவாசியின் வயலில் தோலைக் கண்டார்," என்று மேற்கொள்ளிட்டுள்ளார்.


இதுகுறித்து பாம்பு நிபுனர்கள் தெரிவிக்கையில்., இருதலை பாம்புகள் இருப்பது உண்மை. அதேப்போல் பல தலை கொண்ட பாம்புகள் இருப்பதும் உண்மை. ஆனால் பல தலை கொண்ட பாம்புகள் காணப்படுவது மிகவும் அறிது. மனிதர்களில் இரட்டை குழந்தைகள் ஒட்டி பிறப்பது போன்று பாம்புகளிலும் நிகழ்வதுண்டு. இதன் காரணமாக பாம்புகள் பல தலை கொண்டு வளர்கின்றன என தெரிவித்துள்ளனர்.