தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை -இந்திய வானிலை ஆய்வு மையம்!
தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட பெரும்பாலான மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட பெரும்பாலான மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
இதையடுத்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, தற்போதைய பருவமழையில் பீகாரில் வழக்கமாக பெய்ய வேண்டிய அளவை விட 48% குறைவாக மழை பெய்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 42% அளவுக்கு குறைவாக மழை பெய்துள்ளது.
இந்நிலையில், அருணாச்சலபிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மனிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்கு வங்கம், சிக்கிம், கடலோர ஒடிசா, உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி, காஷ்மீர், பஞ்சாப், கிழக்கு ராஜஸ்தான், குஜராத், கோவா, மத்திய மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரள கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஒடிசா மற்றும் தெற்கு சண்டீஸ்கர் பகுதிகளில் கணிசமான அளவு கனமழை வெளுத்து வாங்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.