18 வயதுக்குட்பட்ட பெண்ணை மணந்த கணவர் உறவு வைத்தாலும் பலாத்காரமே என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தை திருமணத்தை தடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பை வழங்கி உள்ளது.


அந்த தீர்ப்பில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்து, அவருடன் உறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும். திருமணமாகி ஒருவருடத்திற்குள் கணவர் மீது அந்த பெண் புகார் அளித்தால், அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும்.


மேலும் 15 - 18 வயதுள்ள சிறுமிகளை திருமணம் செய்து உறவு கொள்வதும் பலாத்காரமாக தான் கருதப்படும் என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.