டெல்லியில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொந்தரவு தந்த நபர் கைது
டெல்லி ஐடிஓ மெட்ரோ நிலையத்தில் பெண் ஆங்கில தினசரி பத்திரிகையாளாரை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொந்தரவு தந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைத்துள்ளன சுரங்க பாதை படிக்கட்டில் பெண் பத்திரிகையாளர் நடந்து சென்றுக் கொண்டியிருந்தார். அப்பொழுது அதே படிக்கட்டில் எதிர்புறமாக வந்த நபர், அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை பிடிக்கிறார். சுதாரித்துக்கொண்ட அந்த பெண் பத்திரிகையாளர், அவனின் கையை தட்டிவிடுகிறார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடுகிறார். தைரியமான பெண் பத்திரிகையாளர், அவனை விடாமல் துரத்தியபடியே ஓடுகிறார். ஆனால் அவன் தப்பித்து விட்டான். இந்த கட்சிகள் அனைத்தும் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளன.
பின்னட் அந்த பெண் பத்திரிகையாளர் காவல் நிலையத்தில் தனக்கு நடந்த சம்பவத்தை குறித்து தெரிவித்தார். உடனே டெல்லி போலீசார் கிட்டத்தட்ட 500 பேரிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் ஐடிஓவில் உள்ள குடிசை பகுதியில் வசித்து வந்த அகிலேஷ் குமார் என்பவரை கைது, விசாரித்தனர். அவன் தான் குற்றவாளி என்பது உறுதியானது.
டெல்லியில் உள்ள பட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில், குற்றவாளி ஆஜர் படுத்தப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
டெல்லி ஐடிஓமெட்ரோ ரயில் நிலையத்தில் இளம் பெண் பத்திரிகையாளர் பாலியல் துன்பத்துக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.