ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் IAS அதிகாரி, திடீரென ஓட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீரை சேர்ந்த முன்னாள் IAS அதிகாரி ஷாபைசல். இவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சமீபத்தில், ‘ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம்’ என்ற கட்சியை தொடங்கினார். நேற்று முன்தினம் இவர் இஸ்தான்புல் செல்வதற்கான விமானத்தில் ஏறுவதற்காக டெல்லி சென்றார். இந்நிலையில் இவரை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர். 


காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காக மத்திய அரசை விமர்சித்த அவர், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து ஸ்ரீநகருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். பின்னர் அங்கு வீட்டுக் காவலில் சிறைவைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு அவர் திடீரென வீட்டில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள சென்டர் ஓட்டலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள கடைசி அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவருக்கு முன்னதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரகள் ஃபாரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீர், மற்றும் லடாக் ஆகிய பகுதிகளுக்குள் பிரிக்கப்படுவதாக அறிவித்ததை அடுத்து வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.


இதனிடையே ஜம்மு-காஷ்மீர் அதிகாரிகள் கடந்த வாரம் ஸ்ரீநகரில் இருந்து ஆக்ராவுக்கு 20 "சாத்தியமான பிரச்சனையாளர்களை" கொண்ட புதிய குழுவை அரசாங்கம் செய்த அரசியலமைப்பு மாற்றங்களை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மூலம் ஆக்ரா கொண்டுவந்தனர்.


விமானத்தில் பயணித்தவர்களில் காஷ்மீர் உயர்நீதிமன்ற பார் அசோசியேஷனின் தலைவர் மியான் கயூம் அடங்குவார்.