“எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு பெரிய கும்பல் உள்ளது”: இசைப்புயல் AR Rahman!!
தனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு பெரிய கும்பல் வேலை செய்து வருவதாக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதிலிருந்து, அகாடமி விருது பெற்ற சேகர் கபூர் உட்பட பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு பெரிய கும்பல் வேலை செய்து வருவதாக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதிலிருந்து, அகாடமி விருது பெற்ற சேகர் கபூர் உட்பட பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவளித்துப் பேசிய சேகர் கபூர், ரஹ்மான் ஆஸ்கார் விருதைப் பெற்றதுதான் அவருக்கு மிகப்பெரிய பிரச்சனை ஆனது என்றார். பாலிவுட்டில் மற்றவர்களை விட அவரது திறமை சிறந்தது என்பதை அது எடுத்துக்காட்டியது. இதனை மற்றவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று சேகர் கபூர் (Shekhar Kapur) மேலும் கூறினார். அகாடமி விருதை வெல்வது "பாலிவுட்டில் மரணத்திற்கு முத்தமிடுவது போன்றது” என்றும் கபூர் வலியுறுத்தினார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், சேகர் கபூர், "@arrahman உங்கள் பிரச்சினை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சென்று ஆஸ்கார் விருது பெற்றீர்கள். ஆஸ்கார் என்பது பாலிவுட்டில் மரணத்திற்கு முத்தமிடுவது போன்றது. பாலிவுட்டில் மற்றவர்களை விட உங்களுக்கு அதிகத் திறமை உள்ளது என்பதை இது காட்டுகிறது. அதை பாலிவுட்டில் மற்றவர்களால் ஜீரணிக்க முடியவில்லை” என்று ட்வீட் செய்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) தலா இரண்டு முறை ஆஸ்கார் மற்றும் கிராமி விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) திரைப்படத்தில் அவர் செய்த மகத்தான பணிக்காக நான்கு விருதுகளையும் வென்றார்.
பாலிவுட்டில் தனக்கு போதுமான வேலை கிடைக்கவில்லை என்று கூறி ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் ஹிந்தி திரையுலகில் ஒரு புயலைக் கிளப்பினார். அதற்கு ஒரு நாள் கழித்து கபூர் அவருக்கு இவ்வகையில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜூன் 24 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் திரையிடப்பட்ட சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான ‘தில் பெச்சாராவுக்கு’ ஏ.ஆர்.ரெஹ்மான் ஒன்பது பாடல்களை இசை அமைத்துள்ளார்.
ALSO READ: Sushant Suicide Case: வைரலாகும் கங்கணாவின் அறிக்கை பற்றிய Whatsapp chat!!
ஒரு வானொலி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், பாலிவுட் திரைப்படங்களுக்கு ஏன் அதிகமாக அவர் இசையமைப்பதில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டபோது, தன்னைப் பற்றி பாலிவுட்டில் சிலர் தவறான வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்று கூறினார்.
"நான் நல்ல திரைப்படங்களுக்கு மறுப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் ஒரு கும்பல் சில தவறான புரிதல்களால், சில தவறான வதந்திகளை பரப்புகிறது என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிலர் அவரை ஆதரிக்கின்றனர். சிலர் இதை விளம்பரம் தேடிக் கொள்ளும் முயற்சி என்கிறார்கள். எனினும், வழக்கமாக அமைதியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு விஷயத்தைக் கூறி இருக்கிறார் என்றால், அதில் கண்டிப்பாக உண்மை இருக்க வேண்டும் என்றே பலரும் கருதுகிறார்கள்.
ALSO READ: பாலிவுட் இன் இந்த நடிகையின் நம்பரை ரிஷப் பந்த் ஏன் பிளாக் செய்தார்