சிம்லா கார் விபத்தில் 3 பேர் பலி!
கார் மீது ட்ரக் ஒன்று மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
சிம்லாவின் தியோக் பகுதியில் கார் மீது ட்ரக் ஒன்று மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே கோர பலியாகினர்.
ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டார், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் சிகிச்சைக்கைகாக அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.