மும்பை: வீர் சாவர்க்கர் (Vinayak Damodar Savarkar) இந்த நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உருவாக்கி இருக்காது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மேலும் வீர் சாவர்க்கருக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதான "பாரத் ரத்னா" வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவர், நமது அரசு இந்துத்துவா அரசு என்றும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே "சாவர்க்கர்: மறந்துபோன கடந்த காலத்தின் எதிரொலி (Savarkar: Echoes From A Forgotten Past) என்ற வினாயக் தாமோதர் சாவர்க்கரின் சுயசரிதை புத்தகம் வெளியிட்டு விழாவில் தாக்கரே இதனை கூறினார். சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதேவேளையில் நாட்டின் வளர்ச்சிக்காக மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த பணிகளை மறுக்க மாட்டேன் என்று சிவசேனா தலைவர் கூறினார்.


மேலும் தாக்கரே கூறுகையில், "சாவர்க்கர் 14 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அவரை போல அல்லாமல் வெறும் 14 நிமிடங்கள் சிறைக்குள் இருந்திருந்தால் நேருவை ஒரு வீரர் என்று அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது" என்று கூறினார்.


சிவசேனா தலைவர் தாக்கரே தனது உரையில், ராகுல் காந்தியையும் தாக்கி பேசினார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்றும், சாவர்க்கரின் படைப்புகள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் 2019 மக்களவைத் தேர்தலின் தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, சிறையில் இருந்து விடுதலை பெறுவதற்க்காக வீர் சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்டதாக கூறியதையும் நினைவு கூறினார் உத்தவ் தாக்கரே. வீர் சாவர்க்கர் "இந்துத்துவா" என்ற வார்த்தையை பிரபலப்படுத்தியதாக நம்பப்படுகிறது.