மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சுமித்ரா மகாஜன் அனுமதியளித்ததை அடுத்து நேற்று மாலை ஒவ்வொரு எம்.பி-களும் பேசுவதற்கு நேரம் கொடுக்கப்பட்டது. மக்களவையில் ராகுல்காந்தி பேசியதை சிவசேனா பாராட்டி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவையில் ராகுல் பேசியதாவது...! 


ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் ஏற்ப்பட்ட பாதிப்பு, கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி சம்பவம், விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசின் பொய்யான வாக்குறுதி, ஃபேல் போர் விமான ஒப்பந்தம், அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரம் என மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். பின்னர் நீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம். ஆனால், நான் உங்கள் மீது கோபப்பட மாட்டேன் என கூறிய ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கட்டிபிடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 


இச்சம்பவம் குறித்து சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று பிரதமரை கட்டிப்பிடித்தது சிலர் கேலி செய்கின்றனர். ஆனால் உண்மையில் அது பிரதமருக்கு வரும் நாட்களில் கொடுக்கப்படும் அதிர்ச்சியின் அறிகுறி. இது ஆரம்பம் தான். ராகுல்காந்தி அரசியல் வாரிசில் பிறந்தவர் என்று தெளிவாக தெரிகிறது. ராகுல்காந்தி அரசியலை நன்கு கற்றுக்கொண்டார். இனிமே தான் பாஜகவுக்கு பல அதிர்ச்சி காத்திருக்கிறது என ராகுலை புகழ்ந்துள்ளது சிவசேனா கட்சி.