கேரளாவில் முதல் முறையாக சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு
கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் தொடர்ந்து காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்ட நிலையில் அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த மாதம் 28 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த 7 ஆம் தேதி அன்று குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள வைரஸ் (Zika Virus) ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ALSO READ | கொரோனா: இந்த வயதினர்களுக்கு அதிகம் பாதிப்பு; ICMR அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியீடு
இந்நிலையில் அவரது இந்த பரிசோதனையில் அவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கேரளாவில் (Kerala) இந்த தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இதை மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று உறுதி செய்தி இந்த சம்பவம் மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் கேரளாவைச் சேர்ந்த 19 பேரின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. இதில், 13 பேருக்காவது சிகா வைரஸ் தொற்று இருக்கும் என எதிர்பார்ப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியிருந்தார். அதன்படி கர்ப்பிணி பெண் உட்பட 10 பேருக்கு சிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பெண், மாநிலத்தை விட்டு வெளியே சென்றதில்லை. அவரது வீடு தமிழ்நாட்டு எல்லையில் அமைந்துள்ளது. கர்ப்பிணியின் தாயாருக்கும் இந்த அறிகுறிகள் ஏற்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் முடியாத நிலையில் சிகா வைரசும் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கொரோனா 3வது அலை: அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடையும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR