பெங்களூரு: பெங்களூருவில் இளம் பெண்ணுக்கு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலம் தலைநகர் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அங்கிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இவ்விவகாரத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநில போலீஸ் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியை தொடர்ந்து வருகிறது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் இளம் பெண்ணுக்கு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோவானது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


பெங்களூருவின் கம்மானாஹாலி பகுதியில் சாலை ஒன்றில் இரவு இளம்பெண் நடந்து சென்றார். அப்போது அதே சாலையில் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், வழியை மறித்து அந்த இளம்பெண்ணிடம் கொடூரமான நடந்து அந்த இளம்பெண்ணை கீழே தள்ளிவிட்டு வேகமாக பைக்கில் சென்றனர். இது தொடர்பான காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது.  


ஆள் நடமாட்டம் இல்லாத சாலை என்பதினால் இளம் பெண்ணுக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை. 


இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லையானது ஞாயிறு அன்று அதிகாலை 2:30 மணியளவில் நடைபெற்று உள்ளது. அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 


பாலியல் தொல்லை நடைபெற்ற இடத்தில் இருந்து சற்று தொலைவிலேயே சில ஆண்கள் மோட்டார் சைக்கிளில் நிற்கும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளது. இளம் பெண் தெருவில் தனியாக சென்றதை பார்த்து திட்டமிட்டே பாலியல் தொல்லை செய்துள்ளனர்.