Crime News: உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் 33 வயது கேஸ் வெல்டிங் பணியாளர், ஒருவர் அவரது தம்பியால் அடித்துக் கொல்லப்பட்டார். வீட்டின் குளியலறையில் யார் முதலில் குளிப்பது என்பதில் ஆரம்பித்த வாக்குவாதம் கொலை வரை சென்றுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்த ஃபக்கீர் உசேனின் மனைவி மற்றும் மூன்று மகள்களும் காயமடைந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொலைக்குப் பிறகு, 30 வயதான ஷதாப் காவல் நிலையத்திற்குச் சென்று, தனது சகோதரனை மரக்கட்டையால் கொன்றதாகக் கூறி சரணடைந்துள்ளார். சிவில் லைன்ஸ் காவல் நிலைய அதிகாரிகள் அந்த நபரை கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர் மற்றும் அவரது ஐந்து சகோதரர்கள் ஒன்றாக, அப்பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டில் வசித்து வந்தனர். அவர்களில் இருவர் திருமணமாகாதவர்கள்.


குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கைது


உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகர காவல் ஆணையர் அகிலேஷ் படோரியா கூறுகையில், "ஒரு சிறிய விவாதம் இவ்வளவு ஆபத்தில் வந்து முடிந்துள்ளது. விசாரணையில், தரைத்தளத்தின் சுவர்களில் ரத்தம் சிதறியதை போலீசார் கண்டுபிடித்தனர். உயிரிழந்தவர் மற்றும் அவரது மனைவி தங்கள் மூன்று மகள்களுடன் வசித்து வந்தனர். ஐந்து சகோதரர்களும் முதல் தளத்தில் வசிக்கின்றனர். 36 வயதான ஷதாப் மற்றும் அவரது சகோதரர் சஜித் ஆகியோரை கைது செய்துள்ளதாகவும், மேலும் மூன்று பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். https://zeenews.india.com/tamil/tamil-nadu/domestic-violence-at-core-in-ghaziabad-killed-23-year-women-by-family-members-450459


மேலும் படிக்க | H1B விசாவைப் புதுப்பிக்க வெளிநாடு செல்ல வேண்டாம்! இந்தியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பிரதமர்


இறந்தவரின் மனைவி நசீமின் அறிக்கை


பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உயிரிழந்தவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிவில் லைன்ஸ் காவல் நிலையப் பொறுப்பாளர் ஆர்.பி.சர்மா தெரிவித்தார். கொலைக்கான ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இறந்தவரின் மனைவி நசீம் ஜஹானின் கூற்றுப்படி, அவர்களின் மகள் கைருல் நிஷா காலை 11 மணியளவில் குளிக்கச் செல்லும் போது இந்த விவகாரம் தொடங்கியது. அப்போது சஜித்தின் மனைவி முதலில் பாத்ரூம் செல்ல விரும்புவதால் காத்திருக்குமாறு கூறினார். முதல் மாடியில் இருந்து ஷதாப்பும் சஜித்தும் கீழே இறங்கியபோது விஷயம் மோசமாகியது. இதைத் தொடர்ந்து அவர்கள் சிறுமி மற்றும் குடும்பத்தினரை அடிக்கத் தொடங்கினர்.


குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் தனது கணவன் மற்றும் மகள்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக மனைவி கூறினார். இதைச் சொன்னவுடன், தன் கணவர் மீது உடைத்த மரக் கட்டையால் அடிக்க ஆரம்பித்தார். நான் அவர்களிடம் மன்றாடி கேட்டபோது, அவர்கள் என்னை அடித்தனர். பின்னர் அவரது கணவரின் சகோதரர்கள் அவரது மகள்களைத் தாக்க முற்பட்டனர் என உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்தார். அவர்கள் எப்படியோ வீட்டை விட்டு வெளியேறி சிறு காயங்களுடன் தப்பினர்.


மேலும் படிக்க | Viral Video: கவனமா இருங்க பெற்றோர்களே... குழந்தைக்கு நடந்த ஷாக் சம்பவம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ