மாவோயிஸ்ட்கள் 5 பேரை கைது செய்த நிலையில் அவர்களுக்கு வந்த கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல இருப்பதாக தகவல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதனால், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பல மாநிலங்களில் பல இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பிரதமரை கொல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 


மாவோயிஸ்டுகள் 5 பேரை கைது செய்த நிலையில், அவர்களுக்கு வந்த கடிதத்தில் அதிர்ச்சி தரும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளதாக கருதப்படும் ரோனா ஜேக்கப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் போல, பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ராஜீவ் காந்தி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட போது திட்டம் தீட்டப்பட்டு கொல்லப்பட்டார். அதே போல் பிரதமர் மோடி பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பாஜக அரசு தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக குற்றம் கூறி வருகின்றனர்.



இந்த சதி திட்ட கடித விவகாரம் உள்துறைக்கு சென்ற நிலையில், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.