ரியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்காக நடந்த மாரத்தான் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீராங்கனை ஒ.பி. ஜெய்ஷாவிற்கு மாரத்தான் போட்டியின் போது தண்ணீர் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒலிம்பிக் போட்டியின் 9-ம் நாள் அன்று மொத்தம் 42 கிலோ மீட்டர் தொலை தூரம் கொண்ட பெண்களுக்கான மாரத்தான் ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தண்ணீர், குளுகோஸ், பிஸ்கட் மற்றும் புத்துணர்வு அளிக்கக் கூடிய பொருட்களை அளிக்க வேண்டியது அந்தந்த நாடுகளின் கடமையாகும். ஒலிம்பிக்கில் பங்கேற்ற எல்லா நாடுகளும் தங்கள் நாட்டு மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர்களுக்கு தேவையான புத்துணர்ச்சி அளிக்க கூடியப்பொருட்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தன. 


இந்தியாவை சேர்ந்த ஒ.பி. ஜெய்ஷா ரியோ ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் போது வீரர்களுக்கு புத்துணர்வு பொருட்களான தண்ணீர், பிஸ்கட் மற்றும் குளுக்கோஸ் போன்ற பொருட்கள் வழங்க வேண்டிய இந்திய ஒலிம்பிக் சங்கம் அதை செய்யவிலை. 


இதைக்குறித்து ஒ.பி. ஜெய்ஷா கூறியதாவது:- மாரத்தான் பந்தயத்தில் ஜெய்ஷா ஓடும் போது இந்தியாவிற்கு என்று ஒதுக்கப்பட்ட புத்துணர்வு பொருட்கள் வைக்கும் இடத்தில் இந்தியாவின் தேசிய கொடியும் இந்தியாவின் பெயரும் மட்டுமே இருந்தது. இதனால் ஜெய்ஷாவிற்கு தண்ணீர் போன்ற எந்த புத்துணர்வு பொட்ருட்களும் கிடைக்கவில்லை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிப்படி ஒரு வீராங்கானை வேற்று நாட்டினரிடமிருந்து எந்த உணவு பொருட்களோ அல்லது புத்துணர்வு பொருட்களோ வாங்க கூடாது அதை மீறினால் அந்த வீரரோ அல்லது வீராங்கனையோ அந்த போட்டியில் பங்கு பெறும் தகுதியை இழப்பார். ஆனால் எனக்கு எட்டு கிலோ மீட்டருக்கு ஒருமுறைதான் தண்ணீர் கிடைத்து, அதுவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த இடத்திலிருந்து தான் கிடைதது. இதனால் என்னால் போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியவிலை மேலும் நான் போட்டியின் எல்லையை எட்டும்போது மயங்கி விழுந்துவிட்டேன். மயங்கி விழுந்த என்னை காப்பாற்ற கூட இந்திய ஒலிம்பிக் அதிகாரிகள் யாரும் அருகில் இல்லை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை சேர்ந்தவர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 


இது மட்டுமல்லாமல் ஏற்கெனவே விமான பயணத்தின்போது இந்திய வீராங்கனை டூட்டி சந்த் வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறியிருந்தார். மேலும் சில வீரர் வீராங்கனைகள் இந்திய ஒலிம்பிக் அதிகாரிகளின் மோசமான நடவடிக்கைகள் குறித்து குறை கூறியுள்ளனர்.


இந்திய ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகளின் இந்த செயல் இந்திய ஒலிம்பிக் வீரர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிற்காக விளையாடும் வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான மதிப்பும் மரியாதையையும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அளிக்கிறதா என்ற பெரிய கேள்விகுறி எழுந்துள்ளது.


வீரர்களின் திறமை மட்டுமின்றி அவர்களுக்கு நல்ல ஊக்குவிப்பும் இருந்தால்தான் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும் ஆனால் அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டிய அதிகாரிகள் அதை செய்யாமல் தவறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.