நாட்டை உலுக்கியுள்ள ஷ்ரத்தா வழக்கில் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இதில் தினம் தினம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் வீசப்பட்ட மெஹ்ராலி காடுகளில் போலீசார் ஆதாரங்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், Zee News சேனலுக்கு டெல்லி போலீஸ் வட்டாரங்களில் இருந்து பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காட்டில் இருந்து போலீஸார் சில எலும்புகளை கண்டெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் வெட்டுக் காயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாபின் வாக்குமூலத்திற்குப் பிறகு, டெல்லி போலீஸ் குழு நவம்பர் 16 அன்று மூன்று முறை அந்த இடத்திற்கு சென்று விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டது. மெஹ்ரோலி காட்டு பகுதியில் தான் குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் ஷ்ரத்தாவின் சடலத்தின் துண்டுகளை வீசியதாகக் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேடுதலின் போது கிடைத்த எலும்புகள் 


நவம்பர் 16 ஆம் தேதி காலை 6 மணியளவில் சத்தர்பூர் காட்டுப் பகுதியை அடைந்த போலீஸ் குழு, தேடுதலின் போது சில எலும்புகளை கண்டெடுத்தது. மறுபுறம், டெல்லி போலீஸ் குழு காலை 9 மணியளவில் மெஹ்ராலியின் காட்டு பகுதியில் உள்ள 100 அடி சாலையை அடைந்த நிலையில், அங்கு மேற்கொண்ட சோதனையின் போது, ​​​​போலீசார் ஒரு பெரிய எலும்பைக் கண்டுபிடித்தனர். இது தொடை எலும்பு போல் தெரிகிறது. உடலில், தொடை எலும்பு மிகவும் வலிமையானது. மறுபுறம், மூன்றாவது முறையாக, டெல்லி போலீஸ் குழு காட்டுப் பகுதி மற்றும் மெட்ரோ பில்லர் அருகே உள்ள சத்தர்பூர் என்க்ளேவ் அருகே சோதனை நடத்தியது. இங்கு போலீசார் சோதனையின் போது ரேடியஸ்-உல்னா என்னும் முன் கையின் இரண்டு எலும்புகள், முழங்கால் மற்றும் தொடை எலும்பு போன்ற எலும்புகளை கண்டுபிடித்தனர்.


மேலும் படிக்க | ஷ்ரத்தா கொலை வழக்கு: கல்லீரலையும் குடலையும் கைமா போட்ட கொலைகாரன்!


 ரேடியஸ்-உல்னா என்பது கையின் மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையில் உள்ள எலும்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த எலும்பும் மிகவும் வலிமையானது. பட்டெல்லா என்பது இது முழங்கால் தொப்பி என்றும் அழைக்கப்படும் எலும்பு. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த எலும்புகளில் பெரிய கூர்மையான ஆயுதங்களின் வெட்டுக் காயங்களும் காணப்பட்டன. ஆரம்பத்தில் யாரோ வெட்டி உடைக்க முயன்றது போல் தோன்றுகிறது. இந்த எலும்புகள் ஷ்ரத்தாவினுடையதா அல்லது வேறு யாருடையதா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | Delhi Murder Case: கடும் தண்டனையில் இருந்து தப்பிக்க அப்தாப் போடும் மெகா பிளான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ