சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனவல்லா சனிக்கிழமை (ஜனவரி 30, 2021) நிறுவனம் தனது இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியை விரைவில் அறிமுகப்படுத்தும் என அறிவித்தது. இந்த தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டால், இந்தியாவின் மூன்றாவது கோவிட் -19 தடுப்பூசியாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 கோவிஷீல்ட் தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ்-ஸ்வீடன் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து SII  தயாரித்துள்ளது


பரிசோதனை செய்யப்பட்டு வரும் உட்பட்ட கோவோவேக்ஸ் (Covovax) என்ற தடுப்பூசி, கொரோனா வைரஸ் தொற்று எதிராக 'சிறந்த செயல்திறனை' காட்டியுள்ளது என்று SII கூறியுள்ளது. இது குறித்து ஆதார் பூனாவாலா ட்வீட் செய்துள்ளார். தடுப்பூசி 2021 ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



ஜனவரி 16 ஆம் தேதி, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு DCGI இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, இந்தியா நாடு தழுவிய தடுப்பூசி போடும் பணியைதொடங்கியது. அவசரகால பயன்பாட்டிற்காக SII இன் கோவிஷீல்ட் (COVISHIELD) மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.


கோவிஷீல்ட் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. 


இந்தியாவில் (India) தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டதோடு மட்டுமல்லாதமல், சுமார் 150 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி இந்தியா உதவி வருகிறது. இதை உலக நாடுகள் பெரிதும் பாராட்டியுள்ளன. ஐநா தலைமை செயலரும், உலக சுகாதார அமைப்பும் கூட இந்தியாவை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | உலகின் தடுப்பூசி மையமாக இந்தியா விளங்குகிறது: ஐநா தலைவர்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR