உலகின் முதல் டெஸ்ட் டியூப் ( Test Tube ) குழந்தை சீதாதான் என உத்தர பிரதேச துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தர பிரதேசத்தல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அம் மாநில துணை முதல் அமைச்சர் தினேஷ் ஷர்மா கலந்து கொண்டார். அப்போது அங்கு பேசிய அவர், 'இலங்கையில் இருந்து ராமர் புஷ்பக விமானத்தில் இந்தியா திரும்பினார் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். இதுவே தற்போதைய விமானங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பவை. 


இதேபோல் கலப்பையில் இருந்து தோன்றிய சீதை தான் தற்போதைய டெஸ்ட் டியூப் ( Test Tube ) குழந்தைகளுக்கு முன்னோடியாக உள்ளார்'  என்று தெரிவித்தது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. 


இதனால் அதிருப்தி அடைந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் புபேந்தர் யாதவ், ஷர்மாவை நேரில் அழைத்து கண்டித்தார். இந்த கருத்தால் பாஜக தலைமை அதிருப்தி அடைந்துள்ளதாக அவரிடம் கூறினார்.