ராமர் கோயிலுக்கு 6 கோடி ஆண்டுகள் பழமையான பாறைகள்... நேபாளம் டூ அயோத்தி!
Ram Temple: கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்காக நேபாளத்தில் இருந்து 6 கோடி ஆண்டுகள் பழமையான மற்றும் அரிய வகை பாறைகள் அயோத்தி வந்தடைந்தது.
Ram Temple: ராமர் கோயிலின் கருவறையில் வைக்க இருக்கும், ராமர், சீதை சிலையை செதுக்குவதற்கான இரண்டு அரிய பாறைகள், நேபாளத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியை இன்று வந்தடைந்தன. விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய செயலாளர் ராஜேந்திர சிங் பங்கஜ், நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் இருந்து இரண்டு புனித பாறைகளை கொண்டு வந்தார்.
இந்த ஷாலிகிராம் பாறைகள் 60 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. நேபாளத்தில் இருந்து இரண்டு வெவ்வேறு டிரக்குகளில் அந்த பாறைகள் அயோத்தியை அடைந்தது. ஒரு பாறையின் எடை 26 டன் என்றும், மற்றொன்று 14 டன் எடை கொண்டது என்றும் கூறப்படுகிறது.
1000 ஆண்டுகள் தாங்கும்... ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து பாறைகள் - எதற்கு தெரியுமா?
இந்து கடவுளான ராமர் பிறந்த இடத்தில் புனித பாறைகளை அர்ச்சகர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வரவேற்றனர். அவர்கள் கற்பாறைகளை மாலைகளால் அலங்கரித்து சடங்குகளை செய்தனர். அவற்றை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைத்தனர்.
நேபாளத்தின் காளி கண்டகி நதியில் இருந்து எடுக்கப்படும் அரிதான ஷாலிகிராம் பாறைகள் மூலம், ராமர், சீதை சிலை வடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஷாலிகிராம் பாறைகள் அங்கு மட்டுமே காணப்படுகிறது. இந்தக் கல்லில் இருந்து செதுக்கப்பட உள்ள குழந்தை வடிவிலான ராமர் சிலை, ராமர் கோயிலின் கருவறையில் வைக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி பண்டிகைக்கு அது தயாராகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள ஷாலிகிராமம் அல்லது முக்திநாத்திற்கு அருகில் உள்ள கண்டகி நதியில் இந்த இரண்டு பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளர், சம்பத் ராய் கூறுகையில்,"நேபாளத்தில் காளி கண்டகி என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. இது தாமோதர் குண்டில் இருந்து உருவாகிறது. கணேஷ்வர் தாம் கண்டகிக்கு வடக்கே 85 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த இரண்டு கற்பாறைகளும் அங்கிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 6,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது" என்றார்.
மேலும் படிக்க | Adani FPO: அதானியின் பங்குகளை வாங்கி கை கொடுத்த இந்திய தொழிலதிபர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ