அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மதிய உணவை அரசு வழங்கி வருகிறது. அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இலவசமாக மதிய உணவு அளித்து வருகின்றன. ஆனால் அதன் தரம் குறைவு காரணமாக மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் ஒருவித அச்சம் நிலவிக் கொண்டே இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரில் உள்ள ராஜ்கேயா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. 


அப்போது மாணவி ஒருவரின் உணவில் சிறிய அளவிலான பாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதைக் கண்ட மாணவிகள் உணவை வைத்து விட்டு, அலறியடித்து கொண்டு ஓடினர். 


இந்த தகவலை அறிந்த பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.