ஒடிஷாவில் நாகப்பாம்பின் விஷம் பறிமுதல்; அதன் மதிப்பு ஒரு லிட்டர் ஒரு கோடி ரூபாய்
ஒடிசாவில் ஒரு லிட்டர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நாகப்பாம்பு விஷத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஒடிசாவில் ஒரு லிட்டர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நாகப்பாம்பு விஷத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள வனப்பகுதியில் பாம்பின் விஷம் கடத்தப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. எனவே, பாம்பு விஷம் வாங்குபவர்கள் என தங்களை கூறிக் கொண்டு, வனத்துறையினர் பாம்பு விஷம் கடத்தும் கும்பலை சந்தித்து பேசினர்.
அபோது அவர்கள், பாம்பு விஷத்தை 10 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக விலை பேசியுள்ளனர். மாதிரிக்காக வைத்திருந்த 5மிமீ குடுவைகளை காண்பித்தனர். வனத்துறையினர் உடனே அதிரடியாக ஒரு பெண் உட்பட 6 பேர் கொண்ட அந்த கும்பலை கைது செய்தனர். இவர்கள் புவனேஷ்வரில் உள்ள ஜர்படா சிறைசாலைக்கு அனுப்பபட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஒரு லிட்டர் விஷத்தின் மதிப்பு சர்வதேச சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக இருக்கும் என்றும், ஒரு லிட்டர் விஷத்தை சேகரிக்க 200 நாகங்களிலிருந்து விஷம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வன அதிகாரிகள் கூறினார்.
இதை அடுத்து வனவிலங்கு பாதுகாப்பு தடை சட்டத்தின் 9, 39, 44, 49 மற்றும் 51 ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்து விட்டனர் எனவும் வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
ALSO READ | நாய்கள் மற்றும் குதிரைகளுக்கும் ஓய்வூதியம் கொடுக்கும் நாடு எது தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR