ராணுவ வீரர் துப்பாக்கியுடன் மாயம்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் கந்த்முல்லா பகுதி அருகே ராணுவ முகாம் உள்ளது. இம்முகாமில் இந்திய வீரர்கள் கண்காணிக்கின்றனர்.
இந்நிலையில், இதே மாநிலம் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஸாகூர் தாகுர் என்பவர் இம்முகாமில் பணியாற்றி வந்துள்ளார்.
இன்று அதிகாலை முதல் ஏ.கே-47 ரக துப்பாக்கியுடன் ஸாகூர் தாகுர் மாயமாகியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
மேலும் ராணுவத்தின் சார்பிலும் தாகுர் மாயமானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.