மக்களவையில் பதிலுரையின்போது குறுக்கிட்ட ராகுல்காந்தியை டியூப்லைட் என பிரதமர் மோடி விமர்சித்தது பரபரப்பு ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம் 2020-2021ம் ஆண்டிற்கான பட்ஜெட் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் இன்று லோக்சபாவில் உரையாற்றினார். 


குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு மக்களவையில் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார்.  காங்கிரஸை அவர் கடுமையாக விமர்சித்துப் பேசிய போது ராகுல்காந்தி எழுந்து குறுக்கிட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பிரதமர் மோடி, 


தான் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக பேசிக் கொண்டிருப்பதாகவும், ஆனால் "கரண்ட்" அங்கு போய்ச்சேருவதற்கு இவ்வளவு நேரம் தேவைப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். சில டியூப்லைட்டுகள் இப்படித்தான் உள்ளன என்றும் பிரதமர் மோடி கூறினார்.


டெல்லி தேர்தலில் பிரச்சாரம் செய்யும் போது, ராகுல் காந்தி ஒரு பொதுக் கூட்டத்தில் கூறியதாவது: நீங்கள் காத்திருந்து பாருங்கள். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். இப்போது உரைகளை நிகழ்த்தும் நரேந்திர மோடி, ஆறு ஏழு மாதங்களில் தனது வீட்டை விட்டு வெளியேற முடியாது. இந்தியாவின் இளைஞர்கள் அவரை குச்சிகளால் அடிப்பார்கள். எங்கள் இளைஞர்களுக்கு நீங்கள் வேலை கொடுக்காவிட்டால், இந்தியா முன்னேற முடியாது என்பதை அவர்கள் அவருக்குப் புரிய வைப்பார்கள்.


பிரதமர் மோடி மக்களவையில் தனது பதிலை வழங்கினார், அப்போது அதிக சூரிய நமஸ்கர்களைச் செய்வதன் மூலம் "அடிப்பதற்கு" தன்னை தயார்படுத்துவார் என்றார்.