டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்தித்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

INX மீடியா வழக்கில் புலனாய்வுத் துறையால்யால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நேரில் சென்று சந்திக்கின்றனர். 


காங்கிரஸ் தலைவர்களுக்கிடையில் சந்திப்புக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட மாட்டாது என்று திகார் சிறை வட்டாரங்கள் முன்பு ஜீ நியூஸிடம் தெரிவித்தன. செப்டம்பர் 5 முதல் சிறையில் இருக்கும் சிதம்பரத்தை சந்திக்க சோனியாவும் மன்மோகனும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


INX மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரத்திடம் CBI மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றன. CBI-யை தொடர்ந்து அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு வருகிறது. இதற்கிடையில் உடல்நிலை, வயது ஆகியவற்றை காரணம் காட்டி சிதம்பரம் தரப்பில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, சிதம்பரத்தின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்ட சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இதுவரை இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.



செப்டம்பர் 5 முதல் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் திகார் சிறைக்கு சென்று சிதம்பரத்தை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோனியாவும், மன்மோகன் சிங்கும் திகாருக்கு வர உள்ளதாக கூறப்படும் நிலையில், சிதம்பரத்தை சந்திப்பதற்காக அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் திகார் சிறைக்கு வந்துள்ளார்.