ரயில்வேயை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் அடுத்தகட்டமாக, திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள 72 ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எஸ்.ஆர்.எம்.யூ உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டி உள்ள திருச்சி ரயில்வே கோட்டத்தில் நகரங்கள் மற்றும் மாநகரங்களில் உள்ள 72 ரயில் நிலையங்களில், டிக்கெட் பதிவு மையங்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதன்படி, விருதாச்சலம், விழுப்புரம், புதுச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட ரயில் நிலைய டிக்கெட் பதிவு மையங்களுக்காக தனியாரிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தொடங்கிய இந்த டெண்டர், 23-ஆம் தேதி முடிவடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு தனியார் வசம் ஒப்படைக்கவுள்ள ரயில் டிக்கெட் பதிவு மையங்கள் மற்றும் டெண்டர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.