உத்திர பிரதேச மாநிலத்தை தொடர்ந்து உத்தரகண்ட் மற்றும் மத்திய பிரதேசத்திலும் மாயாவதி - அகிலேஷ் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் - பாஜக என்னும் இருபெரும் கூட்டணிகளுக்கு எதிராக மூன்றவாது அணியினை பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி  கட்சியும் கூட்டாக அறிவித்துள்ளன. 


முன்னதாக உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி 37 தொகுதியில் இருந்தும், பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதியில் இருந்தும் போட்டியிட இருப்பதாக அறிவித்தனர். மேலும் மீதமுள்ள 5 தொகுதிகளில் 3 தொகுதிகள் அஜித் சிங்கின் ராஷ் டிரிய லோக் தளத்துக்கு ஒதுக்கப்படுகிறது எனவும் அறிவித்தனர். சோனியா காந்தியின் ரேபரேலி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வில்லை.  


இந்தநிலையில் தற்போது உத்தர பிரதேசதத்தை தொடர்ந்து மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. 


அதன்படி மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 3 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும், மற்ற இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடுகின்றன. 


அதேப்போல் உத்தரகண்ட் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஓரிடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்ளகிலும், மீதமுள்ள ஓரிடத்தில் உள்ளூர் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.