புது டெல்லி: 180 பயணிகள் பயணித்த ஒரு ஸ்பைஸ்ஜெட் விமானம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. இந்த விமானம் மும்பையில் இருந்து குவாஹாட்டிக்கு சென்று கொண்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன்கிழமை காலை 8:45 மணியளவில், விமானத்தின் விமானி கொல்கத்தாவில் உள்ள ஏடிசிக்கு (Kolkata ATC) எரிபொருள் கசிவு இருப்பதாக சந்தேகம் நிலவுவதாகவும், விமானம் அவசர அவசரமாக தரையிறங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். காலை 8:58 மணியளவில் விமானம் தரையிறக்கப்பட்டது என்று என்.எஸ்.சி.பி.ஐ (NSCBI) விமான நிலைய இயக்குநர் கவுசிக் பட்டாச்சார்யா கூறினார்.


மேலும் நாங்கள் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் ஜெனரலுக்கு அறிவித்தோம். பயணிகள் அனைவரும் வேறு விமானம் மூலம் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த விமானம் பராமரிப்புக்கு உட்பட்டுள்ளது. இதனால் இந்த விமானம் தற்போதைக்கு இயக்க முடியாது என்று பட்டாச்சார்யா காலை 11:30 மணியளவில் கூறினார்.