புதுடெல்லி சர்வதேச சூரிய ஒளியமைப்பு நிறுவகத்தின் முதல் மாநாட்டில் பல்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா வந்தடைந்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி வந்தடைந்த அவர் இந்திய குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை டெல்லி ராஸ்ட்ரபதி பவனில் வைத்து சந்தித்தார். தனது வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவை தொடர்ந்து அவர் ஜப்பான் சென்றுவருவார் என தெரிகிறது.



கடந்த சில தினங்களாக இலங்கையில் கடம் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மேலும் கண்டி மாவட்டத்தில் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, இலங்கையில் சிறுபான்மையினர் அதிகமாக இருக்கும் கண்டி திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் வன்முறை நிகழ்வுகள் தொடர்ந்ததை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது. 


இதனையடுத்து சமூக வலைதளங்கள் மூலம் கலவரக்காரர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருக்க நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


இதனால் இலங்கையில் ஏற்பட்டு வரும் அரசியல் நெருக்கடி நிலையிலும், கண்டி மாவட்டத்தில் பெரும் வன்செயல்கள் நடந்துவரும் நிலையிலும் நாட்டில் அவசர பிரகடன நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டார்.


நாடுமுழுவதும் பெரும் கலவரங்கள் வெடித்துக்கொண்டிருக்க, நாட்டின் அதிபர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தகது!